கருணா அம்மான், தனிச் சிறைக்கு மாற்றம்

🕔 November 30, 2016

karuna-011ரச வாகனத்தை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள  முன்னாள் பிரதிமைச்சரும், புலிகளின் முன்னாள் தளபதியுமான  கருணா அம்மான் என்று அறியப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தனிச்சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெலிக்கடை சிறைச்சாலையில் எம்.2 எனப்படும் விசேட பாதுகாப்புடன் காணப்படும் சிறைக்கு கருணா மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற சில குற்றங்களுடன் கருணா தொடர்புபட்டுள்ளார் என, குறித்த குற்றங்கள் தொடர்பான வழக்கின் சாட்சியங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில்,சுமார் 09 கோடி ரூபாய் பெறுமதியான குண்டுதுளைக்காத அரச வாகனமொன்றை, முறைகேடாகப் பயன்படுத்தினார் எனும் குற்றச்சாட்டில் நிதிக்குற்ற தடுப்புப் பிரிவினரால் நேற்று செவ்வாய்கிழமை கருணா அம்மான் கைது செய்யப்பட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்