நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து

🕔 June 7, 2016

Accident - 01234
– க. கிஷாந்தன் –

தலவாக்கல பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த லொறியொன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் காயங்களுக்குள்ளாகி கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று செவ்வாய்கிழமை பிற்பகல் இவ்விபத்து இடம்பெற்றதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் – நுவரெலியா ஏ7 பிரதான வீதியில் தலவாக்கல மெதடிஸ்ட் கிறிஸ்தவ ஆலயத்திற்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுடன், கொட்டகலை பகுதியிலிருந்து தலவாக்கலை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியது.

இவ்விபத்தில் மோட்டர் சைக்கிளை செலுத்திய நபரே காயங்களுக்குள்ளானார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்