கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நஸீருக்கு எதிராக, அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

🕔 June 7, 2016

Hafees Naseer - 013கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டுக்கு எதிராக, அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கனேமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த சட்டத்தரணி பி. லியன ஆராய்ச்சி என்பவர் இந்த மனுவினை தாக்கல் செய்துள்ளார்.

சம்பூர் பிரதேசத்தில் வைத்து கடந்த 20 ஆம் திகதி கிழக்கு மாகாண முதலமைச்சர், கடற்படை அதிகாரி ஒருவரை மோசமமாகத் திட்டியதோடு, மாணவி ஒருவரை நோவினைக்கு உள்ளாக்கியதாக அந்த மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, மேற்படி நபர்களுடையதும் – தனதும் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.

மனுவில் பிரதிவாதிகளாக சட்டமா அதிபரின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் மன்னிப்புக் கோருவதோடு, நஷ்டஈடு ஒன்றினையும் வழங்க வேண்டுமென மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்