சீமெந்து விலை அதிகரிப்பு

🕔 June 2, 2016

Ciment - 09சீமெந்தின் விலை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜூன் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 50 கிலோ கிராம் சீமெந்து பக்கட் ஒன்றின் விலை 60 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் அதிகார சபை இதற்கான அனுமதியினை வழங்கியுள்ளது.

இதன்படி, அல்ட்ராடெக், டோக்கியோ மற்றும் ஹோல்சிம் உள்ளிட்ட ஐந்து வகையான சீமெந்தின் விலைகளும் 60 ரூபாவால் அதிகரிக்கப்பபட்டுள்ளன.

இதற்கமைய 870 ரூபாவாகவுள்ள சீமெந்துப் பக்கற் 930 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்