புலனாய்வுப் பிரிவினர் என்னைக் கண்காணிக்கின்றனர்: மஹிந்த ராஜபக்ஷ

🕔 April 4, 2016

Mahinda - 0134ல்லிணக்கம் என்பது பயங்கரவாதத்திற்கு இடமளிப்பதாக அமையக் கூடாது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு முன்னர், சுதந்திரக் கட்சிக்குள் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது மிகவும் பொருத்தமானது என்றும் அவர் கூறியுள்ளார்.

அனுராதபுரம் மாவிலச்சி ஸ்ரீ சம்புத்த விகாரையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற பின்னர், ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்;

“தேசியப் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்குமாறு ஆரம்பம் முதலே கோரப்பட்டு வருகிறது. பொலிஸார் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் உரிய முறையில் செயற்பட்டிருக்காவிட்டால் தற்கொலை குண்டு அங்கியை மீட்டிருக்க முடியாது.

அரசாங்கம் தமக்கு எதிரானவர்களை பழிவாங்கும் குரோத உணர்வுடன் செயற்பட்டு வருகிறது. 2005ம் ஆண்டு நானும் பழிவாங்கல்களில் ஈடுபட்டிருந்தால் யுத்தத்தை வென்றெடுக்க முடிந்திருக்காது.

நாட்டுக்கு நன்மை செய்து யுத்தத்தினை நிறைவு செய்த என்னையும், எனது பயணங்களையும் கண்காணிக்க, புலனாய்வுப் பிரிவினர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்