96 கிலோ கஞ்சா, யாழ்ப்பாணத்தில் மீட்பு; சந்தேக நபர் தப்பியோட்டம்

🕔 April 4, 2016
Ganja  - 0987யாழ்ப்பாணம் – கொடிகாமம் உசன் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து 96 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சாவை நேற்று ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்புக்கு எடுத்துச் செல்வதற்காக இந்தக் கஞ்சா – தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் கஞ்சாவை வைத்திருந்த நபர் தப்பியோடியுள்ளார்.

யாழ்ப்பாணம் ஊடாக கொழும்புக்கு மேற்படி கஞ்சா கடத்தப்படவுள்ளதாக கிடைத்த ரகசிய தகவல் ஒன்றையடுத்து, போதைப்பொருள் தடுப்பு பிரிவின் பொலிஸ் அதிகாரிகள் மேற்படி கஞ்சாவினை கைப்பற்றியுள்ளனர்.

பயணிகள் பேருந்து ஊடாக, குறித்த கஞ்சாவினை கொழும்புக்கு கொண்டு அனுப்பி வைக்கும் பொருட்டு, ஒரு தொகை கஞ்சாவினை மோட்டார் சைக்கிளில் – உசன் சந்திக்கு எடுத்துவந்த நபரை பொலிஸார் சுற்றி வளைத்தனர்.

இதன்போது, குறித்த போதைப் பொருளை எடுத்து வந்த நபர் மோட்டார் சைக்கிளை கைவிட்டு தப்பிச் சென்றுள்ள நிலையில், அவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் பெறுமதி 23.75 மில்லியன் ரூபாய் என தெரியவருகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்