தலைப்புச் செய்திகள்

நாட்டிலுள்ள சிறைச்சாலை கைதிகளில் 72 வீதமானோர், தண்டனை விதிக்கப்படாத விளக்க மறியல் கைதிகள்

படம்: AI மூலம் உருவாக்கப்பட்டது

நாட்டிலுள்ளநாடு முழுவதிலுமுள்ள மொத்த சிறை கைதிகளில் 72 விதமான ஓர் தண்டனை விதிக்கப்படாத ஒழுக்கம் மறியல் கைதிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் மொத்த சிறைக் கைதிகளின் எண்ணிக்கை 39,516 ஆகும்.

மொத்த கைதிகளில், 28,646 பேர் தண்டனை விதிக்கப்படாத விளக்க மறியல் கைதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களில் 26,935 பேர் ஆண்கள் மற்றும் 1,711 பேர் பெண்கள் ஆவர்.

அதே சமயம், தண்டனை பெற்ற கைதிகளின் எண்ணிக்கை 10,870 ஆக உள்ளது. இதில் 10,588 பேர் ஆண்கள் மற்றும் 282 பேர் பெண்கள் ஆவர்.

ஒட்டுமொத்தமாக, சிறைவாசிகளில் ஆண்களே பெரும்பான்மையாக உள்ளனர்; 1,993 பெண் கைதிகளுடன் ஒப்பிடுகையில் 37,523 ஆண் கைதிகள் உள்ளனர்.

இதே போல சிறைச்சாலைகளில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான சிறை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது

எடுத்துக்காட்டாக 991 கைதிகளை மட்டுமே தங்கவைக்க அனுமதிக்கப்பட்ட கொள்ளளவு கொண்ட மஹர சிறையில், தற்போது 4,447 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர் என்று, கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவின் தலைவர்தலைவரும் சட்டத்தரணியுமான செனக பெரேரா தெரிவித்துள்ளார்.