தலைப்புச் செய்திகள்

மகர சிறையில்நடந்ததுஎன்ன?: கலவரத்துக்கு பின்னரான படங்கள் வெளியாகின

ஹர கலவரத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட அழிவை வெளிப்படுத்தும் வகையிலான, மஹாரா சிறை வளாகத்தின் உள்ளிருந்து எடுக்கப்பட்ட படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சிறைச்சாலை சொத்துக்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளதாகவும், இதுகுறித்த முழுமையான மதிப்பீடு தற்போது நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று (01) சனிக்கிழமையன்று மஹர சிறையில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து, ஒரு கைதி உயிரிழந்ததாகவும், மேலும் பலர் காயமடைந்ததாகவும் வைத்தியசாலை மற்றும் சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கைதிகளின் நலனை விசாரிப்பதற்காக உறவினர்கள் சிறைக்கு வந்தபோது இந்தச் சம்பவம் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

பின்னர், கைதிகள் குழு ஒன்று சிறைக்குள் இருந்து கற்களை வீசத் தொடங்கியதால் பதற்றம் அதிகரித்ததாக சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தக் கலவரத்தின் போது, ​​கைதிகள் குழுவொன்று சிறை வளாகத்திற்குள் கட்டப்பட்டு வந்த தற்காலிகக் கட்டிடத்தை உடைத்துக்கொண்டு தப்பிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.

நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில், சிறை நுழைவாயிலுக்கு அருகே சிறை அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

காயமடைந்த பல கைதிகள் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களில் ஒருவர் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தக் கலவரத்தின் போது, கைதிகள் குழுவொன்று சிறைக் கட்டிடத்திற்குத் தீ வைத்ததாக சிறை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

சிறைக்கு உள்ளேயும் அதைச் சுற்றியும் பாதுகாப்பு கணிசமாக பலப்படுத்தப்பட்டுள்ளது. அமைதியைப் பேணுவதற்காக பொலிஸார், விசேடஅதிரடிப் படை, ராணுவம் மற்றும் கடற்படை வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கைதிகளின் உறவினர்கள், தங்கள் அன்புக்குரியவர்களைப் பற்றிய தகவல்களைத் தேடி சிறைக்கு வெளியேயும் ராகம வைத்தியசாலையிலும் நேற்று கூடினர்.