
இலங்கையில் இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து மொத்தம் 86,000 டெங்கு நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன என, தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, ஜூலை மாதத்தில் அதிகபட்சமாக 29,980 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன.

இதற்கிடையில், ஓகஸ்ட் மாதத்தின் முதல் இரண்டு நாட்களில் 646 டெங்கு நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன.
இந்த ஆண்டில் இதுவரை கம்பஹா மாவட்டம் நாட்டிலேயே அதிகபட்ச டெங்கு நோய்த்தொற்றுகளைப் பதிவு செய்துள்ளது. அது 18,249 ஆகும்.
கொழும்பு மாவட்டம் 17,048 நோய்த்தொற்றுகளுடன், இரண்டாவது அதிகபட்ச நோய்த்தொற்றுகளைப் பதிவு செய்துள்ளது.
நோயின் தொடர்ச்சியான பரவல் காரணமாக, டெங்கு தொடர்பான உயிரிழப்புகளின் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், நாடு முழுவதும் உள்ள 137 சுகாதார வைத்திய அலுவலர் (MOH) பிரிவுகள், அதிக அபாயமுள்ள டெங்கு வளையங்களாக தொடர்ந்து அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.


