தலைப்புச் செய்திகள்

தெம்பிலி லஹிரு எனும் பாதாள உலக நபரின் வீட்டுக்கு தீ வைப்பு

‘தெம்பிலி லஹிரு’ என அறியப்படும் பிரபல பாதாள உலக நபரின் வீடு, மித்தெனிய – குடகலர பகுதியில் நேற்று இரவு (08) அடையாளம் தெரியாத குழுவினரால் தீக்கிரையாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீ விபத்து ஏற்பட்டபோது தெம்பிலி லஹிருவின் தாயார் வீட்டிற்குள் இருந்துள்ளார். இருப்பினும், அவர் காயமின்றி தப்பினார்.

தீவைப்புக்கான நோக்கம் இன்னும் கண்டறியப்படவில்லை.

இச்சம்பவம் குறித்து மித்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.