
நீர்கொழும்பு சிறையில் சமீபத்தில் நடந்த வன்முறையின் போது கொல்லப்பட்ட – சிறை அதிகாரிகளின் மரணங்கள் குறித்த பிரேத பரிசோதனைகள், அவர்கள் கொடூரமான உடல்ரீதியான தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டதை வெளிப்படுத்தியுள்ளன.
பிரேத பரிசோதனை அறிக்கைகளின்படி, மழுங்கிய ஆயுதங்களால் ஏற்பட்ட கடுமையான தலைக் காயங்களால் அதிகாரிகள் உயிரிழந்தனர்.
டொக்டர் சுஜீவ விக்ரமசிங்க தலைமையிலான சிரேஷ்ட சட்ட வைத்திய அதிகாரிகள் அடங்கிய ஐந்து பேர் கொண்ட குழுவினர், நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட 28 உடல்களில் 24 உடல்களுக்கு பிரேத பரிசோதனை செய்ததனர்.
தடயவியல் கண்டுபிடிப்புகளின்படி, 24 மரணங்களில் 14 துப்பாக்கிக் காயங்களால் ஏற்பட்டுள்ளன. ஒன்பது பேர் உடல்ரீதியான தாக்குதல்களின் போது ஏற்பட்ட மழுங்கிய ஆயுதக் காயங்களால் இறந்துள்ளனர்.

மற்றொரு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை நிலுவையில் உள்ளதால், முடிவு செய்யப்படாத தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மழுங்கிய ஆயுதங்களால் ஏற்பட்ட காயங்களால் உயிரிழந்த சிறை அதிகாரிகளுக்கு, கனமான பொருட்களால் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்டதால் ஏற்பட்ட உயிருக்கு ஆபத்தான தலைக்காயம் ஏற்பட்டிருந்ததாக தடயவியல் குழு அறிக்கை அளித்துள்ளது.
இதற்கிடையில், சிறை உயிரிழப்புகள் தொடர்பான நடவடிக்கைகள் இன்று (ஜூலை 9) மாலிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் தொடர்ந்தன.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கிச்சை பெற்று வந்த – சிறை அதிகாரி ஒருவர் காயங்களால் உயிரிழந்ததாக நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டது.
அந்த மரணம் தொடர்பான சாட்சியப் பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது.
பிரேதப் பரிசோதனைகள் நிறைவடைந்த 24 பேரின் உடல்களை இறுதிச் சடங்குகளுக்காக அவர்களது குடும்பத்தினரிடம் அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர்.
மீதமுள்ள நான்கு உடல்களுக்கான பரிசோதனைகள் தொடர்கின்றன. பரிசோதனைக்காகக் காத்திருக்கும் இறந்தவர்களில் ஒருவர் இந்தியர் என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.


