
முப்பது வருடங்களுக்கு முன்னர் நடந்த – ஒரு கொலை சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட 08 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (08) மரண தண்டனை விதித்துள்ளது.
நீண்ட விசாரணைக்குப் பிறகு தீர்ப்பு வழங்கிய மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக ஸ்ரீ ராகல, குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளன என்று தீர்ப்பளித்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் 07 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். ஒருவருக்கு எதிரான நடவடிக்கைகள் அவர் இல்லாத நிலையில் மேற்கொள்ளப்பட்டன.

1997 செப்டம்பர் 21ஆம் திகதி அல்லது அதற்குச் சற்று முன்னதாக, கொழும்பு நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட தாரவத்த பகுதியில், ஒரு ஆணும் ஒரு பெண்ணும் கொல்லப்பட்டதற்கும், மேலும் பலர் காயமடைந்ததற்கும் எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.
நீண்ட காலமாக நீடித்த ஒரு தகராறு வன்முறையாக முற்றியதன் விளைவாக – இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.


