
ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை வழக்கு தொடர்பாக, நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்ட தேசிய கல்வி நிறுவனத்தின் (NIE) முன்னாள் பணிப்பாளர் ஐ.ஜி.எஸ். பிரேமதிலகவை – குற்றவாளி எனக் கண்டறிந்த உச்ச நீதிமன்றம், அவருக்கு 06 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
சிறைத் தண்டனையுடன், நீதிமன்றம் ரூ. 3 மில்லியன் அபராதமும் விதித்துள்ளது. அந்த அபராதத்தைச் செலுத்தத் தவறினால் மேலும் ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டுமெனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆணடு ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, பிரேமதிலக செயல்படுத்தத் தவறியதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளின் பேரில், இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தேசிய கல்வி நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் – அந்த உத்தரவை வேண்டுமென்றே புறக்கணித்தது நீதிமன்ற அவமதிப்புக்கு ஒப்பானதாகும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


