தலைப்புச் செய்திகள்

இஸ்ரேல் ரசாயனத் தொழிற்சாலை மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: வீடுகளைப் பூட்டி உள்ளே இருக்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை

தெற்கு இஸ்ரேலிலுள்ள ரசாயன தொழிற்சாலையொன்றின் மீது ஈரானிய ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அபாயகரமான கசிவு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக, அருகிலுள்ள குடியிருப்பாளர்களை வீட்டிற்குள் இருக்குமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான நியோட் ஹோவாவ் தொழிற்சாலை, பீர்ஷேபா நகருக்குத் தெற்கே 9 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.

இந்தத் தாக்குதலில் ஒருவர் காயமடைந்ததாக, அந்த நாட்டின் அவசரகால சேவை தெரிவித்துள்ளது.

தொழிற்சாலையில் அபாயகரமான பொருட்கள் இருப்பதால், நியோட் ஹோவாவ் பகுதி மக்கள் வீட்டிற்குள் இருக்க வேண்டுமென்றும், தங்கள் ஜன்னல்களை மூடி வைத்திருக்க வேண்டும் எனவும் இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.