
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – நாடு முழுவதும் 1200 மாணவர்களுக்கு கடந்த ரமழான் காலத்தில் 07 நாட்களைக் கொண்ட தலைமைத்துவப் பயிற்சிப் பட்டறைத் திட்டத்தை நிறைவு செய்வதற்கு உதவிய இணைப்பாளர்கள் மற்றும் வளவாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு, நேற்றிரவு நிந்தவூரில் நடைபெற்றது.
கட்சியின் கல்விப் பிரிவினுடைய மாவட்ட இணைப்பாளரும் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான எஸ். எம். சபீஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
இதன்போது, எதிர்காலத்தில் அம்பாறை மாவட்ட இளைஞர்களை சிறப்பாக வழிநடத்தும் வகையில் ‘ACMC – Future Leaders’ திட்டங்கள் தொடர்பாகவும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்விப் பிரிவின் தொடர்ச்சியான திட்டங்கள் தொடர்பாகவும் விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றதுடன் வளவாளர்களின் ஆலோசனைகளும் பெறப்பட்டன.
கடந்த ரமழான் மாதத்தின் போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஏற்பாட்டில் Future Leaders எனும் தலைப்பில் 07 நாட்களைக் கொண்ட பயிற்சிப் பட்டறையொன்று நடத்தப்பட்டது.
இதில் நாடு முழுவதுமிருந்து 1200 மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
நேற்றிரவு நடைபெற்ற நிகழ்வில், இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹீர், கட்சியின் பிரதிச் செயலாளர் சட்டத்தரணி எம்.ஏ. அன்ஸில், கொள்கைப் பரப்புச் செயலாளர் அப்துல் கே.எம். ஜவாத், நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி ரியாஸ் ஆதம் உள்ளிட்டோருடன் அம்பாறை மாவட்ட வளவாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் திட்ட இணைப்பாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.






