
போர் தொடங்கியதிலிருந்து ஈரானில் இதுவரை 02 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் என், அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
நேற்றிரவு, தெஹ்ரானின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் பெரும் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகவும், அவை ராணுவத் தலைமையகங்களை மட்டுமல்லாமல், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளையும் தாக்குகியதாகவும் அல் ஜசீராவின் செய்திகள் கூறுகின்றன.
ஈரானின் ஹோர்மோஸ்கான் மாகாணத்திலுள்ள பந்தர் கமீர் நகரில், ஒரு படகுத்துறை மீது அமெரிக்கா-இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டதாகவும், மேலும் நான்கு பேர் காயமடைந்ததாகவும் ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலில் இரண்டு படகுகளும் ஒரு வாகனமும் தாக்கப்பட்டு சேதமடைந்ததாகவும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


