
திருகோணமலையில் புத்தர் சிலை சம்பவம் தொடர்பாக – பலாங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் திருகோணமலை கல்யாணவன்ச திஸ்ஸ தேரர் ஆகியோருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட விளக்கமறியல் உத்தரவை செல்லாததாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான தீர்ப்பை – பெப்ரவரி 3 ஆம் திகதிக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர்கள் ரோஹந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெனாண்டோ ஆகியோர் அடங்கிய அமர்வு – இன்று (30) இந்த உத்தரவை பிறப்பிக்க திட்டமிட்டிருந்தனர் என செய்திகள் கூறுகின்றன.
இருப்பினும், உத்தரவு இன்னும் வழங்கத் தயாராக இல்லை என்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் தெரிவித்தார்.

அதன்படி, பெப்ரவரி 3 ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்படும் என்று அமர்வு அறிவித்தது.
இந்த உத்தரவு முன்னதாக இறுதி செய்யப்பட்டால், அடுத்த திங்கட்கிழமை அது வழங்கப்படும் என்றும், சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு முறையாக அறிவிக்கப்படும் என்றும் நீதிமன்றம் மேலும் தெரிவித்தது.


