
இலங்கையைச் சேர்ந்த சபினா யூசுப் – திருமதி (Mrs. World) உலக அழகிப் போட்டியில் உலகளவில் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்ற 41ஆவது திருமதி உலக அழகிப் போட்டியில், சபினா – இரண்டாவது ரன்னர்-அப் (2nd Runner-up) இடத்தைப் பெற்றார்.
சபினா – முதல் 20 இறுதிப் போட்டியாளர்களுக்குள் முன்னேறினார். மேலும் அழகுப் போட்டிப் பிரிவின் – திருமதி புகைப்படவியல் பட்டத்தையும் பெற்றார்.

திருமதி உலக அழகுராணிப் போட்டி மிக நீண்ட காலமாக ச்ர்வதேச அளவில் நடைபெற்று வருகிறது.
இதில் இலங்கை சார்பில் ரோஸி சேனநாயக்க முதலாமிடத்தைப் பெற்று முதன்முறையாக முடிசூட்டப்பட்டார். அந்த வரிசையில் தற்போது இலங்கை சார்பில் சபினா – மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளார்.


