
பலாங்கொட கஸ்ஸப தேரர் உட்பட நான்கு பௌத்த பிக்குகள் மற்றும் 06 பேரை – தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலை போதிராஜ விஹாரையில் புத்தர் சிலையை வைத்ததன் மூலம் கடலோர பாதுகாப்பு சட்டங்களை மீறியதாகக் கூறி கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட இவர்களை – விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இவர்கள் இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட போது, அவர்களை பெப்ரவரின 02ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


