
அஸ்வெசும திட்டத்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்டங்களுக்கான பணம் இன்று (28) முதல் வங்கிக் கணக்குகளில் இருந்து பெற்றுக் கொளள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 2026 இல், மொத்தம் 14 லட்சத்து 15,584 குடும்பங்கள் – முதல் கட்டத்தின் கீழ் பணத்தைப் பெற்றுக் கொள்ளவுள்ளன. இதற்காக, அரசாங்கம் ரூ. 11,234,713,750 ரூபாயை ஒதுக்கியுள்ளது.

இரண்டாம் கட்டமாக, 248,454 குடும்பங்கள் சலுகைகளைப் பெறுவார்கள். அதற்காக அரசாங்கம் ரூ. 2,235,137,500.00 ஒதுக்கியுள்ளது.


