
அம்பலாங்கொடயில் இன்று (22) காலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார்.
இறந்தவர் அம்பலாங்கொட நகரத்தில் உள்ள ஒரு கடையின் முகாமையாளர் எனத் தெரியவந்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள், துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூடு இரண்டு போட்டி குற்றக் குழுக்களுக்கு இடையிலான மோதலின் விளைவாக நடந்தது என தெரியவந்துள்ளது.


