
பெருமளவு ஐஸ் போதைப் பொருளுடன் நேற்று (21) கரந்தெனியவைச் சேர்ந்த 39 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 8.58 கிலோகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
எல்பிட்டிய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட சோதனையின் போது, சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவர் கரந்தெனிய பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இன்று (22) அவர் பலபிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.


