
தங்காலை – சீனிமோதராவில் உள்ள வீடொன்றில் நேற்று (22) பெருமளவு போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் – உயிரிழந்த நபரின் இரண்டு மகன்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தங்காலையில் நேற்று 03 லொறிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 705.91 கிலோகிராம் போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன. இதன் மதிப்பு கிட்டத்தட்ட 9.9 பில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இவற்றில் 284.94 கிலோகிராம் ஹெரோயின், 420.976 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் ஆகியவை அடங்கும்.
தாங்காலை- சீனிமோதர பகுதியிலுள்ள ஒரே வீட்டிற்குள் இரண்டு நபர்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்நு கிடந்தமையைத் தொடர்ந்து, ஆரம்பிக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது – மேற்படி போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

இவற்றுடன்ஒரு ரி-56 துப்பாக்கி மற்றம் 05 புதிய கைத்துப்பாக்கிகளையும் பொலிஸார் மீட்டனர்.


