தலைப்புச் செய்திகள்

மின்சார சபை ஊழியர்களின் அனைத்து விடுமுறைகளும் ரத்து

லங்கை மின்சார சபை ஊழியர்களுக்கான அனைத்து விடுமுறைகளும் மறு அறிவிப்பு வரை உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் – இதனை எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி உத்தரவின் கீழ் மின்சாரம் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கும் விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், தற்போது ஊழியர்களின் விடுமுறைகளும் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

1979 ஆம் ஆண்டின் 61ஆம் இலங்க – அத்தியாவசிய பொது சேவைகள் சட்டத்தின் பிரிவு 2, ஜனாதிபதிக்கு வழங்கியுள்ள அதிகாரங்களின் கீழ், மேற்படி வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.

மின்சார ஊழியர்களின் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையின் பின்னணியில், விடுமுறை ரத்து செய்யப்பட்டு, மின்சார விநியோகம் தொடர்பான சேவைகள் அத்தியாவசியமானவையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார சபையை நான்கு முக்கிய நிறுவனங்களாகப் பிரித்து, அதை மறுசீரமைக்க அரசாங்கம் எடுத்த முடிவை எதிர்த்து, கடந்த சில நாட்களாக இலங்கை மின்சார சபை ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.