தலைப்புச் செய்திகள்

ஜீப் – முச்சக்கர வண்டி மோதி மூவர் உயிரிழப்பு: 10 நாள் குழந்தையை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போது நடந்த சோகம்

ஜீப் மற்றும் முச்சக்கர வண்டி மோதிக்கொண்ட விபத்தில், இன்று (27) காலை பச்சிளம் குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.

கெப்பிட்டிகொல்லாவ – மதவாச்சி பிரதான வீதியிலுள்ள கோனமரியாவ பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது.

உயிரிழந்தவர்கள், பதவியா பகுதியைச் சேர்ந்த ஒரு பாட்டி, அவரின் மகள் மற்றும் 10 நாள் பச்சிளம் குழந்தை ஆகியோராவர்.

குழந்தைக்கு சிகிச்சையளிப்பதற்காக அவர்கள் அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு சென்றுகொண்டிருந்தபோது, இந்த விபத்து நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.