தலைப்புச் செய்திகள்

நான்கு பெண்கள் ஒரே தடவையில் பிரதிப் பொலிஸ் மா அதிபர்களாக பதவி உயர்வு: இலங்கை வரலாற்றில் முதல் முறை

பொலிஸ் திணைக்களத்தில் நான்கு பெண்கள் ஒரே தடவையில் பிரதி பொலிஸ் மா அதிபர்களாக பதவிக்கு பதவி உயர்வு பெற்றுள்ளனர். இவ்வாறு நிகழ்வது இலங்கை வரலாற்றில் இதுவே முதல் தடவையாகும்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழு – இந்த பதவி உயர்வுகளுக்கான அனுமதியை வழங்கியுள்ளது. இந்த வருடம் ஜனவரி 01 முதல் – இவர்களின் பதவி உயர்வுகள் அமுலுக்கு வருகின்றன.

இதன்படி, தர்ஷிகா குமாரி, பத்மினி வீரசூரிய, ரேணுகா ஜெயசுந்தர மற்றும் நிஷானி செனவிரத்ன ஆகியோர் பிரதிப் பொலிஸ் மா அதிபர்களாகியுள்ளனர்.

புதிதாக நியமிக்கப்பட்ட பொலிஸ் மா அதிபர்களில் மூன்று பேர் 1997 இல் பயிற்சி உதவிப் பரிசோதகர்களாக பொலிஸ் சேவையில் இணைந்தவர்கள்.

பிரதிப் பொலிஸ் மா அதிபர்களின் விபரங்கள் வருமாறு;

  • தர்ஷிகா குமாரி – தற்போது பொலிஸ் களப் படை தலைமையகத்தின் கட்டளை அதிகாரியாக பணியாற்றுகிறார், மேலும் அந்தப் பதவியை வகிக்கும் முதல் பெண் அதிகாரியும் இவர்தான்.
  • பத்மினி வீரசூரிய – தற்போது களுத்துறை மாவட்டத்திற்குப் பொறுப்பான பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபராக உள்ளார். இலங்கை பொலிஸ் வரலாற்றில் ஒரு மாவட்டத்தை மேற்பார்வையிடும் முதல் பெண் அதிகாரி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
  • ரேணுகா ஜெயசுந்தர – இவர் தற்போது சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பதவியிலுள்ள இவர், சிறுவர் மற்றும் பெண்கள் மீதான துஷ்பிரயோக விசாரணைப் பணியகத்தின் பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபராக பணியாற்றுகிறார்.
  • இந்த நால்வரில் சிரேஷ்ட அதிகாரியான நிஷானி செனவிரத்ன, அரச புலனாய்வு சேவையில் பணியாற்றிய பின்னர், ஆராய்ச்சி மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் பதில் பொலிஸ் மா அதிபராகப் பணியாற்றுகிறார்.