
நாட்டில் 12 மணித்தியாலங்களுக்குள் 04 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. இவற்றில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
பாணந்துறை, அலுபோமுல்லவில் உள்ள பமுனுகமதிஸ்ஸ மாவத்தையில் அமைந்திருக்கும் ஒரு கடையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இன்று (06) துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தனர். சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை.
இறுதியாக நடைபெற்ற மேற்படி துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன், அதற்கு முன்னுள்ள 12 மணித்தியாலங்களில் நான்கு துப்பாக்கிச் சூடுகள் பதிவாகியுள்ளன. வெள்ளிக்கிழமை இரவு, கிராண்ட்பாஸில் மஹாவத்த கடிகார கோபுரத்திற்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு இளைஞர் கொல்லப்பட்டார். மட்டக்குளியவில் மற்றொரு துப்பாக்கிச் சூடு நடந்ததது. அங்கு கொட்டுகொட சாலையில் உள்ள ஒரு வீட்டின் மீது துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது.

மற்றொரு சம்பவத்தில், மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இன்று (06) சனிக்கிழமை அதிகாலை நீர்கொழும்பு, குட்டிடுவவில் உள்ள ஒரு வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். மட்டக்குளிய மற்றும் நீர்கொழும்பு துப்பாக்கிச் சூடுகளில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
நாட்டில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்துள்ளமை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


