தலைப்புச் செய்திகள்

49 ஆயிரம் கஞ்சா செடிகள், 05 நாட்களில் சிக்கின: 29 பேர் கைது

நாட்டில் 05 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 48,925 கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்ட அதேவேளை, அது தொடர்பில் 29 பேர் கைதாகினர் என்று, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதே, இந்த பெருந்தொகை கஞ்சா செடிகள் சிக்கின.

05 நாட்களில் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,027 ஆகும். 

அவர்களில், 2,998 பேர் ஹெரோயின், ஐஸ், ஹாஷிஸ், கஞ்சா மற்றும் சட்டவிரோத சிகரெட்டுகளை வைத்திருந்தனர் என்று, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.