தலைப்புச் செய்திகள்

கெஹல்பத்தர பத்மேயின் ஐஸ் போதைப் பொருள் உற்பத்தி நிலையம் நுவரெலியாவில் கண்டுபிடிப்பு

இந்தோனேசியாவில் அண்மையில் கைது செய்யப்பட்டு, தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகத் தலைவன் கெஹெல்பத்தர பத்மேயின் நிதியில் இயங்கி வந்த, பெரியளவிலான ஐஸ் போதைப்பொருள் (மெத்தம்பேட்டமைன்) உற்பத்தி நிலையம் நுவரெலியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

ரூபவாஹினி தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட அமைச்சர், இந்த தகவலை வெளியிட்டடார்.

‘கெஹெல்பத்தர பத்மே’ என்று பரவலாக அறியப்படும் பாதாள உலகக் குற்றவாளி மண்டினு பத்மசிறி, இந்த போதைப்பொருள் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்காக 04 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளார் என்றும், அமைச்சர் கூறினார்.

நுவரெலியாவில் உள்ள ஒரு வீட்டை தொழிற்சாலையாக நடத்துவதற்காக வாடகைக்கு எடுத்துள்ளதாகவும், போதைப்பொருளை உற்பத்தி செய்வதற்காக 2,000 கிலோகிராம் ரசாயனப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் புலனாய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.