
– தில்சாத் பர்வீஸ் –
சம்மாந்துறை பிரதேசத்தில் இன்று (03) ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்ப்டதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்மாந்துறை – பிர்தௌஸ் பள்ளிவாசல் வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்படும் மூன்று மாடி வீட்டின் மேல் அறை ஒன்றில், குறித்த நபரின் சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் சம்மாந்துறை பகுதியைச் சேர்ந்த கலந்தர் லெப்பை முகம்மட் அஷ்ரப் (54 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


