தலைப்புச் செய்திகள்

05ஆம் வகுப்பு புலமைப் பரிசில் பரீட்சையில் 17.11 வீதமானோர் சித்தி

2025 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையில் 51,969 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

இது பரீட்சை எழுதிய மொத்த மாணவர்களில் 17.11 வீதமானோர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடந்து முடிந்த புலமைப் பரிசில் பரீட்சை கடந்த ஓகஸ்ட் 10ஆம் திகதி நடைபெற்றது. இதன்போது 2,787 பரீட்சை நிலையங்களில் மொத்தம் 307,951 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றினர்.