
எரிசக்தி அமைச்சர் குமார ஜெயகொடி மீது லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு வழக்குத் தொடர உள்ளது என, சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
உரக் கூட்டுத்தாபனத்தில் 2015 ஆம் ஆண்டு நிதி முறைகேடு செய்ததாக, இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
08 மில்லியன் ரூபாயை முறைகேடாகப் பயன்படுத்தியதாக அமைச்சர் மற்றும் இருவர் மீது மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் குமார ஜெயகொடி – அப்போது ஒப்பந்த சபையின் தலைவராக பணியாற்றியபோது – வழங்கிய ஒப்பந்தம் தொடர்பில் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.



