தலைப்புச் செய்திகள்

தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட பீடாதிபதியாக பேராசிரியர் ஹலீம் மீண்டும் தெரிவு

– நூருல் ஹுதா உமர் –

தென்கிழக்குப் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் பீடாதிபதியாக மீண்டும் பேராசிரியர் எம்.ஏ.எல்.ஏ. ஹலீம் தெரிவாகியுள்ளார்.

இந்தத் தெரிவு இன்று (15) பொறியியல் பீட கேட்போர் கூடத்தில் உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைடீன் தலைமையில் நடைபெற்றது.

பீட உறுப்பினர்கள் அனைவரின் ஏகோபித்த ஒப்புதலின் பேரில் அவர் மீண்டும் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கல்முனையைச் சேர்ந்த பேராசிரியர் ஹலீம், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் சிறப்புப் பட்டம் பெற்ற பிறகு, 1993 ஓகஸ்ட் மாதம் வரை அங்கு மின்னியல் மற்றும் இலத்திரனியல் துறையில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார்.

பின்னர் ஹொங்கொங்கில் முதுநிலைப் பட்டப் படிப்பையும், அமெரிக்காவின் ஸ்டீவன்ஸ் இன்ஸ்டிடியூட் ஒப் டெக்னாலஜியில் கலாநிதி பட்டப் படிப்பையும் நிறைவு செய்தார்.