
கூரிய ஆயுதம் மற்றும் பொல்லுகளால் தாக்கி, திவுலபிட்டிய – துனகஹா பகுதியில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட பிரச்சினை காரணமாக, மூன்று நபர்கள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த பாதிக்கப்பட்டவர், முதலில் திவுலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் – அங்கு அவர் உயிரிழந்தார்.

இறந்தவர் மாதம்பெல்ல பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் என, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மூன்று சந்தேக நபர்களையும் கைது செய்ய திவுலப்பிட்டிய பொலிஸார் ஒரு குழுவை நியமித்துள்ளனர்.



