
இலங்கையின் சுற்றுலாத்துறை கடந்த 06 மாதங்களில் 3.7 பில்லியன் டொலர் வருமானத்தை ஈட்டியதாக – அமைச்சர் அமைச்சர் விஜித ஹேரத் அண்மையில் தெரிவித்த தகவல் உண்மையில்லை எனத் தெரியவந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் 06 மாதங்களில் இலங்கையின் சுற்றுலாத்துறை ஈட்டிய வருமானம் 1.7 பில்லியன் டொலர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இதுவரையில், இலங்கைக்கு 1.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும், இதன் மூலம் கடந்த 06 மாதங்களில் அரசாங்கம் 3.7 பில்லியன் டொலர் வருமானத்தை ஈட்டியுள்ளதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்திருந்தார்.
ஆனால், இதுகுறித்து ஆராயும் விதமாக FactSeeker, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் மாதாந்த அறிக்கைகளை ஆய்வு செய்தபோது, இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை 1.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர்.

அதன்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் 06 மாதங்களில் இலங்கையின் சுற்றுலாத்துறை ஈட்டிய வருமானம் 1.7 பில்லியன் டொலர் என்பதும் தெரியவந்துள்ளது.
தொடர்பான செய்தி: சுற்றுலா பயணிகளால் 3.7 பில்லியன் டொலர் 06 மாதங்களில் நாட்டுக்கு வருமானம்



