தலைப்புச் செய்திகள்

கெஹலிய, மனைவி, மகள் ஆகியோருக்கு பிணை கிடைத்தும் மறியல்

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் இன்று (18) கைது செய்யப்பட்ட பின்னர், நீதிமன்றம் அவர்களுக்கு பிணை வழங்கிய போதும், அவரத்கள் பிணை நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியமைக்காக மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட மூவரும் – கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர் செய்யப்பட்டமையை அடுத்து, அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டது.

கெஹலிய ரம்புக்வெல்ல, அவரின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் தங்கள் சொத்துக்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து – வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜரானார்கள்.

கொழும்பு நீதவான் தனுஜா லக்மாலி அவர்களை ரூ. 50,000 ரொக்கப் பிணையிலும் 05 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 09 சரீரப் பிணையிலும் விடுவிக்க உத்தரவிட்டார்.

இருப்பினும், பிணை நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியதால், கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.