தலைப்புச் செய்திகள்

பிணையில் வந்துள்ள கெஹலிய ரம்புக்வெல்ல மீண்டும் கைது

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் பணமோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள்னர்.

லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு – இவர்களைக் கைது செய்துள்ளது.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இன்று (18) காலை லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவுக்கு – வாக்கு மூலம் வழங்கச் சென்றிருந்தார்.

தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் ரம்புக்வெல்ல, மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.