
கொழும்பு மாநகர சபையின் 26வது மேயராக தேசிய மக்கள் சக்தியின் வ்ரே கலி பால்தசார் இன்று (18) காலை பதவியேற்றார்.
திங்கட்கிழமை (16) நடைபெற்ற ரகசிய வாக்கெடுப்பைத் தொடர்ந்து, கொழும்பு மேயராக வ்ரே கலி பால்தசார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ரகசிய வாக்கெடுப்பின் போது, வ்ரே கலி பால்தசார் 61 வாக்குகளைப் பெற்றார். ஐக்கிய மக்கள் சக்தியின் ரிசா சாரூக் 54 வாக்குகளைப் பெற்றார். இதன்போது, இரண்டு வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.
கொழும் மாநகர சபைத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 48 இடங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 29 இடங்களையும் பெற்றது.



