தலைப்புச் செய்திகள்

பஸ், லொறி மோதியதில் 23 பேர் காயம்: இருவர் நிலை ஆபத்து

இரத்தினபுரி-அவிசாவளை சாலையில் எஹெலியகொட மின்னான சந்திக்கு அருகில் இன்று (18) காலை நடந்த விபத்தில் 23 பேர் காயமடைந்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் மற்றும் லொரி ஆகியவை அந்தப் பகுதியில் உள்ள ஒரு வளைவில் நேருக்கு நேர் மோதிக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் 09 பேர் பெண்கள், 14 பேர் ஆண்கள் என்றும், இருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் அவர்கள் மேலும் கூறியுள்ளனர்.

காயமடைந்தவர்களில் பஸ் மற்றும் லொரி ஆகியவற்றின் சாரதிகளும் அடங்குவதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.