
சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவை தொடர்ந்தும் ஜூன் 25ஆம் திகதி வரை – விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று அவரை கொழும்பு நீதவான் நீதிமன்றம் ஆஜர்படுத்திய போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஜனாதிபதியின் பொது மன்னிப்பை முறைகேடாகப் பயன்படுத்தி, கடந்த வெசாக் தினத்தின் போது, சிறைக் கைதிகள் விடுவிக்கப்பட்டமை தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவர் நேற்று முன்தினம் (09) கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து அவர் இன்று 11ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டார்.
முன்னதாக, அவரை பணி இடைநீக்கம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்திருந்தது.
அவரின் பணி இடைநீக்கக் காலத்தில் – அவருடைய சம்பளத்தில் அரைவாசியை வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.



