
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் வீட்டில் வேலை செய்த வந்த – முன்னாள் பணிப்பெண்ணை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்படி பணிப்பெண்ணை – லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு இன்று (11) கைது செய்தது.
சுகாதார அமைச்சுக்கு பெயரளவிலான நியமனங்களைச் செய்து, அரசாங்க சம்பளம் மற்றும் மேலதிக நேர கொடுப்பனவுகளை மோசடியாகப் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மீது – ஆணைக்குழு தற்போது நடத்தி வரும் விசாரணையின் அடிப்படையில் குறித்த பணிப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
எம்பிலிப்பிட்டியவைச் சேர்ந்த கைது செய்யப்பட்ட சந்தேக நபர், இன்று (11) புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், ஜூன் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.



