
தென்கொரியாவில் நடைபெற்று வரும் 26வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் – இலங்கை வீரர் கலிங்க குமாரகே வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.
தென்கொரியாவின் குமி சிவிக் மைதானத்தில் நடந்த ஆண்களுக்கான 400 மீட்டர் இறுதிப் போட்டியில், கலங்க குமாரகே 45.55 வினாடிகளில் ஓடி மூன்றாவது இடத்தை வென்றார்.
இந்தப் போட்டியில் கட்டார் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் முறையே தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளனர்.



