
முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதே வழக்கில் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நலின் பெனாண்டோவுக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில்,விளையாட்டுக் கழகங்களுக்கு விநியோகிப்பதற்காக – கேரம் போர்டுகள் மற்றும் டாம் போர்டுகளை இறக்குமதி செய்ததன் மூலம், அரசுக்கு பல மில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அப்போது விளையாட்டு மற்றும் வர்த்தக அமைச்சராக மஹிந்தானந்த அளுத்கமகே பதவி வகித்தார்.
சந்தேக நபர்களுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கில், விளையாட்டுக் கழகங்களுக்கு விநியோகிப்பதற்காக 14,000 கேரம் போர்டுகள் மற்றும் 11,000 டாம் போர்டுகளை இறக்குமதி செய்தபோது, 53.1 மில்லியன்ரூபாய் பணம் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.



