தலைப்புச் செய்திகள்

மத்துகம பிரதேச சபை சுயேட்சைக் குழு உறுப்பினர்களுக்கு, தேசிய மக்கள் சக்தியினர் பணம் வழங்க முன்வந்தமை அம்பலம்

ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ள மத்துகம பிரதேச சபையின் சுயேச்சைக் குழு உறுப்பினர்கள், தேசிய மக்கள் சக்தி – தங்கள் ஆதரவை வாங்குவதற்கு முயற்சித்ததாக குற்றம் சாட்டுகின்றனர்.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் ஒருவர் பேரம் பேசியதைக் காட்டும் சிசிரிவி காட்சிகள் தங்களிடம் இருப்பதாகவும் – சுயேசட்சைக் குழுவின் பிரதிநிதி ஒருவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார். ஆயினும் அந்த காட்சிகள் பகிரங்கமாக வெளியிடப்படவில்லை.

“முதல் கலந்துரையாடல் என் வீட்டில் ஒரு தேசிய மக்கள் சக்தி அமைச்சருடன் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தின் சிசிரிவி காட்சிகள் என்னிடம் உள்ளன. அடுத்த இரண்டு சந்திப்புகளும் கொழும்பில் நடந்தன” என்றும் அவர் அவர் கூறினார்.

சுயேட்சைக் குழுவுக்கு முதலில் மாகாண சபை வேட்புமனுக்கள் வழங்கப்படும் என்றும், அதைத் தொடர்ந்து ஒவ்வொருவருக்கம் தலா 08 மில்லியன் ரூபாய் பணம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது என்றும் சுயேட்சைக் குழு உறுப்பினர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், மத்துகம பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்காகவே, ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிப்பதற்கு தாம் முன்வந்துள்ளதாகவும் சுயேட்சைக் குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.