
– அஹமட் –
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் (GMOA) இன்று 28ஆம் திகதி – கல்முனை சுகாதார பிராந்தியத்தில் முன்னெடுத்த வேலைநிறுத்தம் படு தோல்வியடைந்தள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகருக்கு எதிராக, இந்த வேலைநிறுத்தம் ஏற்பாடாகியிருந்தது.
இருந்தபோதிலும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் – வேலை நிறுத்தம் நடைபெறுவதற்கான எந்த ஒரு அறிகுறியும் தென்படவில்லை.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவு தொடக்கம் சகல பிரிவுகளிலும், அனைத்து நோயாளர்கள் கவனிப்பும் வழமை போல், மிகவும் சிறப்பாக நடைபெறுவதாக அங்குள்ள உத்தியோகத்தர்கள் கூறிகின்றனர்.
அந்த வகையில், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஏற்பாடு செய்த – மேற்படி வேலை நிறுத்தம் தோல்வியில் முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேபோல பிராந்தியத்திலுள்ள ஏனைய வைத்தியசாலைகளிலும், வழமை போல் அனைத்து நடவடிக்கைகளும் நடந்து வருவதாக அறியக் கிடைக்கிறது.
இது இவ்வாறிருக்க, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் உள்ளேயும், வெளியேயும் அநேகமான வைத்தியர்கள் – அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருக்கே தமது ஆதரவினை வழங்குவதாக தெரியவருகிறது.
சில நாட்களுக்கு முன்னர், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகருக்கு எதிராக, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு முன்பு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் சில வைத்தியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டமும் தோல்வியில் முடிந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்றைய தினம் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 26 வைத்தியர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன. அவர்களில், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் 85 வைத்தியர்களில் 12 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.
வைத்தியர்கள் அந்த ஆர்ப்பாட்டத்தை நடத்திக் கொண்டிருந்த போது, அதற்கு எதிராக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை அத்தியசட்சகர் டொக்டர் ஜவாஹிருக்கு ஆதவு வழங்கும் பொருட்டு, ஒரு கவன ஈர்ப்பு நடவ டிக்கையில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.


தொடர்பான செய்தி: அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சிறப்பான நிர்வாகத்தை, நபரொருவர் மீண்டும் குழப்புகின்றார்: ஊழியர்களின் பிரதிநிதிகள் குற்றச்சாட்டு
தொடர்பான வீடியோ



