
கடற்படையினரால் நேற்று (27) தெற்கு கடற்கரையில் தடுத்து நிறுத்தப்பட்ட இரண்டு பல நாள் மீன்பிடி படகுகள் – சுமார் 500 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் (கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன்) ஆகியவற்றைக் கொண்டு சென்றமை கண்டுபிடிக்கப்பட்டது.
இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் இணைந்து நடத்திய இந்த நடவடிக்கையில் – பதினொரு மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் தெவிநுவரவைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
கைப்பற்றப்பட்ட படகுகள் மேலதிக விசாரணைகளுக்காக திக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
தெற்கு கடற்கரைக்கு அப்பால் உள்ள ஆழ்கடலில் நடத்தப்பட்ட கூட்டு நடவடிக்கையில், அதிக அளவு போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற – இரண்டு பல நாள் மீன்பிடி படகுகள் நேற்று கைப்பற்றப்பட்டன.



