
நாட்டில் கடந்த 5 மாதங்களில் நடந்த 45 துப்பாக்கி பிரயோக சம்பவங்களில் 30 பேர் கொல்லப்பட்டதுடன், 22 பேர் காயமடைந்துள்ளனர்.
45 துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 29 துப்பாக்கிப் பிரயோகங்கள் – திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களினால் மேற்கொள்ளப்பட்டவை என்று பொலிஸார் கூறியுள்ளனர்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் – நாட்டில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவின் சுமித்ராராம வீதியில் நேற்று (16) மாலை வேளையில் துப்பாக்கிச் சூடு சம்பவமொன்று இடம்பெற்றது.
கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 42 வயதுடைய ஒரு ஆணும் 70 வயதுடைய ஒரு பெண்ணும் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



