தலைப்புச் செய்திகள்

கடுவெல நீதவானின் அலுவலக அறைக்கு சீல் வைப்பு

கடுவெல நீதவானாக முன்னர் பணியாற்றிய சனிமா விஜேபண்டாரவின் அலுவலக அறைகளை சீல் வைக்க – நீதித்துறை சேவை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாக கடுவெல பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை, கடுவெல நீதவான் நீதிமன்றத்திற்கு திங்கட்கிழமை (19) சென்று சீல் வைக்கப்பட்ட அறைகளிலிருந்து தனது தனிப்பட்ட பொருட்களை எடுப்பதற்குகு, முன்னாள் நீதவான் சனிமா விஜேபண்டாரவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நீதவான் வரும் வரை, நீதவானின் அறையைப் பாதுகாப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

சனிமா விஜேபண்டாரவுக்கு எதிராகப் பெறப்பட்ட பல புகார்களின் அடிப்படையில், நீதித்துறை சேவை ஆணைக்குழு நடத்தி வரும் விசாரணையின் ஒரு கட்டமாகவே, அவரின் அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இதனால் கடுவெல நீதவான் நீதிமன்றத்தின் நீதித்துறை செயல்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.