
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் விடுதியில் வைத்து, பெண் வைத்தியரை வண்புணர்வு செய்ததாகக் கூறப்படும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்னேவ பொலிஸார் இன்று (12) அவரை கைது செய்ததாக – பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது உறுதிப்படுத்தினார்.
இதேவேளை, சந்தேக நபரை உடனடியாகக் கைது செய்யக் கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று (12) நாடளாவிய வேலைநிறுத்தத்தைத் தொடங்கியது.
பாதிக்கப்பட்ட 32 வயதுடைய பெண் வைத்தியர், திங்கள் கிழமை (10) தனது கடமைகளை முடித்துவிட்டு, அரச வைத்தியர் விடுதிக்குத் திரும்பியிருந்தார்.
இதன்போது மாலை 6.30 மணி முதல் மாலை 7.00 மணி வரை, அடையாளம் தெரியாத ஒரு நபர் வளாகத்திற்குள் நுழைந்து, கத்தியைக் காட்டி மிரட்டி, குறித்த வைத்தியரை வன்புணர்வு செய்துள்ளார்.
சம்பவம் குறித்து அனுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் பாருங்கள்



