தலைப்புச் செய்திகள்

ஆயுதப் படையிலிருந்து தப்பித்த 875 பேர் கைது

யுதப் படைகளில் இருந்து சட்டவிரோதமாக வெளியேறிய 875 நபர்களைக் கைது செய்ததாக – பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் 704 சிப்பாய்கள் மற்றும் ராணுவத்தைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் அடங்குவர். மேலும் கடற்படையைச் சேர்ந்த 73 பேரும் விமானப்படையைச் சேர்ந்த 100 பேரும் அடங்குவர்.

இந்த நடவடிக்கையை ராணுவ பொலிஸாரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்படுவார்கள்.

சமீப காலமாக நாட்டில் நடைபெற்று வரும் குற்றங்களில் – ராணுவத்திலிருந்து தப்பித்தவர்கள் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.